Categories
பல்சுவை

மழைக்காலத்தில் வீட்டில் கொசுத்தொல்லையா….? இதை செஞ்சி பாருங்க…. கொசு ஓடிவிடும்….!!!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கு கொஞ்சம் கஷ்டமாகி போய்விடும். ஏனென்றால் மழைக்காலங்களில் துணிகளை துவைத்து காய வைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்கள் மழை காலத்தில் அதனுடைய தன்மையிலிருந்து மாறும். இவ்வாறு மழைக்காலங்களில் தங்களுடைய வீட்டில் உள்ள பொருட்களை எளிதில் பராமரிப்பதற்கு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க நெருப்பில் வேப்பிலை போட்டு புகைப்போடலாம். ஆல் அவுட் உள்ளிட்ட மருந்துகளின் காலி பாட்டில்களில் வேப்பெண்ண்ணெயையை நிரப்பி அவற்றை ப்ளக்கில் சொருகிவிட்டால் கொசுக்கள் ஒழியும். மழைக்காலங்களில் பீரோவிற்குள் ஈரக்காற்று செல்வதால் துணிகள் மொரமொரப்பை இழந்து தொய்வாக காணப்படும். இதை தவிர்க்க சாக்பீஸ் கட்டிகளை பீரோக்களின் உள் வைத்தால் அவை காற்றின் ஈரப்பதத்தை உறிந்துவிடும்.

Categories

Tech |