Categories
மாநில செய்திகள்

மழைக்காலம் முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை…. கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் கடிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து நிவாரண முகாம்களை தாழ்வான பகுதிகளில் நடத்தப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து  தொடர்ந்து மழை பெய்து வரும் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும். இந்த மருத்துவ சேவை அளிப்பதற்கு சுகாதாரம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கக் கூடாது.

அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள் 770 வாகனங்களில் சென்று சிகிச்சை அளித்து நோய் தடுப்பு முகாம்கள் சேவையை வழங்கி வருகின்றனர். இந்த சேவை மழை காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து அரசு இயந்திரம் துடிப்புடன் செயல்படும். அதனை தொடர்ந்து காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் அரிப்பு போன்ற நோய்களை கண்காணித்து முழுமையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகள், பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்துகள் தடுப்பு மருந்துகள் போன்றவற்றை இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்றவற்றை தடுப்பதற்கான மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, அத்தியாவசிய சிகிச்சை, பிரசவ சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பாதிக்காமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதை துணை இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இணை இயக்குனர்கள் தனியார் மருத்துவமனைகள் கலந்துரையாடி கூடுதல் ஆக்சிஜனை இருப்பு மற்றும் ஜெனரேட்டர் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த பட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தடையில்லாமல் செயல்படுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். சென்னையில் செயல்பட்டு வரும் பொது சுகாதார இயக்குனரகத்தில் 24 மணி நேர சேவை கட்டுப்பாட்டு அறையில் 044-2951 0400, 2951 0500,94443 40496 மற்றும் 87544 48477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |