Categories
அரசியல் மாநில செய்திகள்

மழைக்காலம் முடியட்டும்… அப்புறம் இருக்கு அவங்களுக்கு… அதிரடி காட்டும் ஸ்டாலின்…!!!

மழைக்காலம் முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் அன்று ஒரு நாள் மட்டும் 23 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் இந்த மழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 6 நாட்களாக இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இருப்பினும் முதல்வர் முக ஸ்டாலின் மழை பாதிப்புகள் தொடர்பாக சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூறுவதை பற்றி கவலைப் படுவதே கிடையாது எனவும், என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது தான் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் எதிர்க்கட்சிகள் என்ன புகார் சொன்னாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை மழை முடிந்த பிறகு எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, நிச்சயமாக யார் குற்றவாளிகளோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Categories

Tech |