Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மழைக்காலம் வந்திருச்சு… வறட்டு இருமல் குணமாக… சிறந்த தீர்வு….!!!

வறட்டு இருமல் குணமாக சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

மஞ்சள் பால்:

மஞ்சள்  நம்முடைய பண்டைய கால இயற்கை முறைகளில் ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து வறட்டு இருமலுக்கு மஞ்சள் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதற்க்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் குணமாகும். மேலும் இருமல் வருவதை தடுக்கும்.

துளசி :

நம்முடைய வறட்டு இருமலுக்கு மிகவும் எளிதான ஒரு நிவாரணம் என்றால் அது துளசி தான். துளசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியாக்கள் உள்ளது.எனவே தினமும் இந்த துளசியை சிறிது சாப்பிட்டு வந்தால் நம்முடைய இருமல் சரியாகும். மேலும் இதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தாலும் நமக்கு தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும்.

தேன் :

தேனில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய வறட்டு இருமலுக்கு மிக சிறந்த நிவாரணமாக இருக்கும். மேலும் இது நம்முடைய தொண்டைக்கு நல்ல இதமான மருந்தாகவும் இருக்கும். இதற்க்கு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை சூடேற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொது குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு வறட்டு இருமல் சரியாகும்.

மசாலா டீ :

சிறிதளவு தண்ணீரில் சோம்பு மற்றும் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், பின் அதில் சுவைக்காக தேன் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் நம்முடைய தொண்டை புண் மற்றும் இருமல் சரியாகும். இல்லையெனில் கொதிக்கும் நீரில் சிறிது இன்ஜி போட்டு அதனை வடிகட்டி குடித்தாலும் நம் இருமல் சரியாகும்.

Categories

Tech |