நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை மக்களவை கூடிய உடன், ராகுல்காந்தி தலைமையில் எது கட்சி எம்பிக்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் அவை முடக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் பேச்சுவார்த்தைக்கு தயாராகாமல் இருப்பதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.