சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ராமாபுரத்தில் 20 கோடி மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் கட்டுமான பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சென்னையில் பருவமழையின் போது கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகளில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வளசரவாக்கம் பகுதிகளில் மழை பெய்யும் பொழுது மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் வீடுகளுக்குள் மழை நீர் சூழும் நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியாக அடையாள அட்டை இணைக்கும் கால்வாய் ஒன்று இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பாக கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் சென்னை மாநகராட்சி நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடை பெற்று வருவதாகவும் சென்னையில் உள்ள நீர்நிலைகள் 16 கால்வாய்களை தூர் வாரும் பணி 200 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்திற்கு பதில் தெரிவித்த அமைச்சர்கள் மாசுபிரமணியன் ஜெயக்குமாரின் பேச்சு அநாகரீக தனம் போல இருக்கு என்பதை அனைவரும் அறிவார்கள் அவரின் பேச்சுக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கடந்த 9 வருடங்களில் குட்கா, கஞ்சா போன்ற பொருட்களை பயன்படுத்தி அவர்கள் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என அவருக்கு தைரியம் இருந்தால் கூறட்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100 சதவீதம் தடை செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்திற்கு வரும் கஞ்சா பற்றியும் ஆய்வு செய்தபோது ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஆந்திராவில் இருந்தே அதிகம் தமிழகத்திற்கு கடத்தி வருவதை உறுதி செய்து ஆந்திராவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனால் 6500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதை கண்டறிந்து ஆந்திர அரசுக்கு கூறியுள்ளோம். உடனடியாக அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த பாதிப்பு 4000 கோடி என்றும் இது போன்ற செயல்களில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதா? என சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.