Categories
மாநில செய்திகள்

மழைநீர் தேங்காமல் தடுப்பது எப்படி?…. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மற்றும் வெள்ள நீர் வடிகால்வாய் வடிவமைப்பதற்காகவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் மற்றும் மழைநீர் தேங்கி தாழ்வான பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களில் தனித்தனியாக குழுவாக சென்று இந்த குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வறிக்கை டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் நீர் தேங்காமல் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தரமாக செய்யப்பட வேண்டிய பணிகள் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பித்தனர். சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலபடுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும். மேலும் புறநகர் பகுதிகளில் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதன்பிறகு உயரத்தில் இருக்கும் மழை நீர் வடிகால்வாய்களை சமப்படுத்த வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |