Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் தூய்மைப்பணி… முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

சென்னையில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி மழை நீர் செல்வதை அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இந்த நிலையில் 20 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது..

கடந்த காலங்களில் சென்னையில் 52க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிய சூழல் இருந்தது.. எனவே கடந்த முறை போல இல்லாமல், அந்த மழை நீர் தங்குதடையின்றி செல்வதற்கான பணிகள் அனைத்து அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.. இது தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் எவ்வளவு பணியாளர்கள் இந்த பணியை மேற்கொள்கிறார்கள், ஒவ்வொரு இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. இந்த ஆய்வின்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் இருந்தனர்..

இன்று வேளச்சேரி, பள்ளிக்கரணை, திருவான்மியூர் உள்ளிட்ட  9 இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. சென்னையில் 4 ஆயிரத்து 254 இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |