Categories
மாநில செய்திகள்

“மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்”… தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்…!!!!!

சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளாலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம் மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சென்னை வாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற பணிகள் மெத்தனமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது தமிழக அரசுக்கு முறையான திட்டமிடல் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பும் எந்தவித ஒத்துழைப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுவதாக தெரிகின்றது. மேலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளம் வெட்டி வைத்திருப்பதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் இதை ஆட்சியாளர்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு சென்னையில் நடைபெற்று வரும் பணிகளை நடைபெற்று வரும் பணிகளை இந்த ஆட்சியாளர் விரைந்து முடித்திட வேண்டும் என சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |