சென்னை மணலி புது நகர் கொசஸ்தலை ஆறு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதற்கட்டமாக சென்னை வடிவுடையம்மன் கோயில் தெரு அருகே கொசஸ்தலை ஆறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சென்னை, கொருக்குப்பேட்டையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கார்கில்நகர், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அப்போது வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.