Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. “இடிபாடுக்குள் சிக்கி சிறுமி உள்பட 2 பேருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் சிறுமி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது. இதற்காக பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தார்கள். நேற்று விழா முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டைகட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எட்டு அடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சுவர் பேன்சி மற்றும் பொம்மை கடைகள் மீது இடிந்து விழுந்ததால் கடையில் இருந்தவர்கள் இடுப்பாடுக்குள் சிக்கினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த இடிபாடுகளில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பேன்சி கடைக்காரர்கள் ஹாமியன் பேகம், ரபிக்வுல் இஸ்லாம், இசாத் அலி, தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் சஹானா, வெங்கடேசன் என்பவரின் மகள் ஹேமாவதி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே ஹாமியன் பேகம் மற்றும் சஹானா பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |