மழையால் ஒத்திவைக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக நவம்பர் 8 முதல் 12 வரை நடக்கவிருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் டிசம்பர் 24 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதிய ஹால் டிக்கெட்டை வரும் 14ம் தேதி முதல் dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.