தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அந்தந்த பகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் உதவி செய்து வருகின்றனர். தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும்” என்று அவர் கூறினார்.