சேலத்தில் மழையால் வீடு சரிந்து 5 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பொன்னம்மாப்பேட்டை. இங்குள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ராமசாமி(தறி தொழிலாளி). நேற்று இரவு ராமசாமி தனது ஓட்டு வீட்டில் மனைவி நந்தினி, குழந்தை பால சபரி (5) மற்றும் தந்தை ஏழுமலை, அக்காள் காளியம்மாள், காளியம்மாளின் மகன் மாரியப்பன், காளியம்மாளின் மகள் புவனா ஆகியோர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை 8 மணி அளவில் மழை பெய்தபோது ராமசாமியின் ஓட்டு வீடு அப்படியே சரிந்து அவர்கள் மீது விழுந்தது.
உடனே அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன் பால சபரி இறந்துவிட்டான்.ஓட்டு வீடு சரிந்ததால் ராமசாமி மற்றும் அவனது மனைவி நந்தினி உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.வீடு சரிந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீராணம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உதவி கமிஷனர் சரவணகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இடிபாட்டில் கிடந்த சிறுவனின் சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அனுப்பிவைத்தனர். இந்த வீடு இடிந்த விபரத்தை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், ஆட்சித்தலைவர் விஷ்ணு வர்த்தினிமற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தனர் அப்போது பொதுமக்கள் அல்லிக்குட்டை பகுதியில் உள்ள ஏரி நிரம்பி விட்டது .
இதன் நீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க மாற்று பாதையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அல்லிகுட்டை பகுதியில் சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது .
மழை நீர்வீடுகளுக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.