புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக சிமெண்டு சீட்டு போட்ட ஓட்டல் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாடிமாநகர் பகுதியில் பெய்த கனமழையால் தென்னை மட்டைகள், மரக்கிளைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனையடுத்து மழையின் போது அப்பகுதியில் சிமெண்டு சீட்டு போட்ட ஓட்டலில் உருமநாதன் மற்றும் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளே மழையின் காரணமாக ஒதுங்கி நின்றுள்ளனர்.
அப்போது மரம் விழும் சத்தம் கேட்டதால் 5 பேரும் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது அருகில் நின்ற தென்னை மரம் முறிந்து ஓட்டலின் மேலே விழுந்ததால் ஓட்டல் முற்றிலும் சேதமடைந்துள்ளது.