சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தும்பிபாடி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய தோட்டத்தில் சுமார் 2 1/2 ஏக்கர் பரப்பளவில் திசு வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் அறுவடைக்கு வாழைத்தார்கள் தயாராக உள்ள நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழைத்தார்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கடையாம்பட்டி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் 2 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று தாசில்தாரிடம் கண்ணீர் விட்டுள்ளார்.