நடிகை நதியா மழையில் நடனமாடுவது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நதியா. இதையடுத்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜ குமாரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் . தற்போது நடிகை நதியா திரிஷ்யம்-2 தெலுங்கு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
https://twitter.com/ActressNadiya/status/1409860747086077961
இந்நிலையில் நடிகை நதியா மழையில் குடை பிடித்தவாறு நடனமாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.