Categories
மாநில செய்திகள்

மழையில் பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும்.

இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். மேலும் கல்வி ஆவணங்கள் சேதமடைந்து இருந்தாலும் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து இருந்தால் மாணவர்களை மாற்று வகுப்பறையில் அமர வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |