தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வுகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தொடர்புகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா உயிர் இழப்புகள் குறைந்த நிலையில், மழை காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், இரண்டு நாளில் ஊரடங்கு முடிவடைவதால் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் மதியம் இரண்டு மணிக்கு மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதுபற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.