Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மழை இன்றி கருகிய நெற்பயிர்கள்… “விவசாயிகள் வேதனை”… கலெக்டர் அலுவலகத்தில் மனு…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா கட்டவிலாகப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, திருவாடானை பகுதியில் இந்த வருடம் நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு இழப்பீடு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |