Categories
தேனி மாவட்ட செய்திகள்

மழை இல்லாத காரணத்தால்… 60 அடியாக குறைந்த நீர்மட்டம்… வேதனையடைந்த விவசாயிகள்…!!

வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து வினாடிக்கும் 1,800 கனஅடிவீதம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தற்போது சில வாரங்களாக மழை எதுவும் இல்லாத காரணத்தால் வைகை அணையின் நீர்வரத்து சரிந்துள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே அணைக்கு நீர் வரத்தாக இருந்து வருகின்றது. மேலும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 60 அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |