மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணாவரி நிலங்களில் சின்ன வெங்காயம் சுமார் நூறு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக வெங்காயம் செடிகளில் வேர் அழுகல் நோய் அதிகளவில் பரவி வருகிறது.
காய் பிடிக்கும் பருவத்தில் நோய் தாக்கி உள்ளதால் சின்ன வெங்காய செடிகள் மண்ணோடும் மடிந்தது வருகிறது. இந்நிலையில் உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 30,000 முதல் 50,000 வரை செலவு செய்து விவசாயிகள் உரிய விளைச்சல் எடுக்க முடியாமல் வேதனைகளில் தவித்து வருகின்றனர்.