பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புறம் மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போதே நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் முடியதால் மழைக் காலங்களில் சுமார் மூன்றடி உயரத்திற்கு ஆலயத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்பதால் சோழர் கால சிற்பக்கலைகள் சிதிலம் அடையும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆலயத்தின் தெற்குப் பகுதியில் தூர்வாரும் பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன எதிர்வரும் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.