மாம்பாக்கம் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் டீ அருந்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருவாக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று முதல்வர் முக. ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய முதல்வர் மாம்பாக்கத்தில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார்.
இதையடுத்து அந்த டீக்கடையில் இருந்த ஊழியர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோர் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனை செவிலியர்கள் 2 பேரை அழைத்து எங்கு பணிபுரிகிறீர்கள் என்ற விவரத்தை முதல்வர் கேட்டறிந்தார். பின்னர் அந்த 2 செவிலியர்கள் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.