Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. பெண்களுக்கு நாப்கின் வழங்குங்க… சசிகலா கோரிக்கை..!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள், மருந்து, மாத்திரை போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலகட்டத்தில் துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 24 மணி நேரத்திற்குள் நிலைமையை சரி செய்தது போன்று, தற்போது துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தேங்கிய நீரை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இரண்டு நாட்களாக மின்சாரம் தடைபட்டதால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்க் காலியாக உள்ளதால், தேவையான நீரை ஏற்ற முடியாமல், பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே நிலைமையை சரிசெய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |