Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மழை வர தொடங்கிட்டு… காய்ச்சல், சளி வராம இருக்கணுமே…. இந்த சூப் போதும்…!!

மழைக் காலங்களில் ஏற்படும் இருமல் காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகளுக்கு துளசி மற்றும் வெற்றிலை சேர்ந்த சூப்…

தேவையான பொருட்கள்:

  • துளசி இலை – ஒரு கைப்பிடி
  • வெற்றிலை – 6 இலைகள்
  • சீரகப் பொடி – அரை ஸ்பூன்
  • மிளகு பொடி – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
  • தூதுவளை இலை – ஒரு கைப்பிடி
  • புளிக்கரைசல் -ஒரு ஸ்பூன்
  • தக்காளி -1
  • இஞ்சி – ஒரு துண்டு
  • சிவப்பு மிளகாய் – 1
  • தண்ணீர் – ஒரு கப்
  • உப்பு – தேவைக்கேற்ப

 

செய்முறை:
வெற்றிலை, தக்காளி, இஞ்சி மற்றும் துளசியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் தேவையான அளவு மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, புளிக்கரைசல், தூதுவளை இலை, இஞ்சி, சிவப்பு மிளகாய், தக்காளி, உப்பு  சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பிறகு வடிகட்டி மிளகு பொடி சேர்த்து சூடான சுவையான சூப்பை அருந்தலாம்.

Categories

Tech |