புயல் காரணமாக வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம். நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மழையால் வீடுகள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் வரக்கூடும் என்பதால், அவற்றை கண்டு அச்சமடைந்து அடித்துக் கொள்ளவும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட பாம்புகளின் வகைகளில் நான்கு வகை மட்டுமே ஆபத்தானவை. மேலும் பாம்புகள் வந்தால் 044-222003345 என்ற உதவி எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.