Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்கள்”…. நிவாரண உதவி வழங்கல்..!!!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா பகுதியில் கன மழை பெய்து வருவதால் வெள்ளேரிசோலாடி, பொன்னானி, விளக்கலாடி உள்ளிட்ட ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது.

ஆதிவாசி காலனிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து பந்தலூர் வருவாய் துறை சார்பாக அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை தாசில்தார் நடேசன் வழங்கினார். மேலும் பல வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்ய தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.

Categories

Tech |