Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ளப் பாதிப்பு… “முதலில் 550 கோடி வேண்டும்”…. மொத்தம் ரூ.2,079 கோடி… தமிழக அரசு கோரிக்கை!!

மழை, வெள்ளப் பாதிப்புக்கு ரூபாய் 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி டி ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, டெல்டா, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதை தொடர்ந்து, அதற்காக நிவாரணப் பணிகளுக்காக 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர் பாலு நேரில் சந்தித்து தமிழக அரசின் கோரிக்கை சார்ந்த மனு அளித்துள்ளார்.. அந்த மனுவில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை ஏற்பட்டது.. நவம்பர் 2ஆவது  வாரத்தில் வடகிழக்கு பருவமழை 49.6% அதிகமாக இருக்கிறது.. ஒட்டுமொத்தமாக 49,757 ஹெக்டர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது..

தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணமாக உடனடியாக 550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். ஒட்டுமொத்தமாக 2,079 கோடி வழங்க வேண்டும். 25 மாவட்டங்களில் கனமழை பெய்தது, 18 மாவட்டங்களில் சேதங்கள் என்பது  கடுமையாக ஏற்பட்டுள்ளதால், இந்த உடனடி நிவாரண தொகை வழங்கினால், இழப்பீடு வழங்குவது எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது..

 

Categories

Tech |