Categories
தேசிய செய்திகள்

மழை வெள்ளம் சூழ்ந்ததால்… படகில் நடந்த திருமண ஊர்வலம்… வைரலாகும் வீடியோ….!!!

பீகார் மாநிலத்தில் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் மணமக்கள் படகில் ஊர்வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர கிராமத்தில் உள்ள மக்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்ட சூழ்நிலையில், சமஸ்திபூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.

திருமணம் மணப்பெண் வீட்டில் நடைபெற்று முடிந்தது. இருவரும் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல தயாரானார்கள். ஊர் முழுவதும் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்ததால் ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் திருமணம் முடிந்து ஊர்வலமாக மணமகன் வீட்டிற்கு செல்ல வேண்டிய சடங்கு முறையை ஒரு படகு வைத்து அதில் ஊர்வலமாக செல்ல வேண்டிய மணமக்கள் இந்த படகில் ஏறி கிராமத்திற்கு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Categories

Tech |