Categories
மாநில செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு இழப்பீடு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இழப்பீட்டுத் தொகை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உயிரிழப்பு ஏற்பட்டால் 4 லட்சம் நிவாரணம், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தால் 4800 ரூபாய், குடிசை முழுவதுமாக இடிந்து இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய், சேதமடைந்த குடிசைக்கு 4,100, சமவெளியில் வீடு இடிந்து இருந்தால் 95 ஆயிரத்து 100, மலைப்பகுதிகளில் வீடு இடிந்து இருந்தால் 1,01,900, கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால் 95 ஆயிரம், பசு மற்றும் எருமை மாடு இறப்பு ஒன்றுக்கு 30,000, ஆடு மற்றும் பன்றி இறப்பு ஒன்றுக்கு 3000 ரூபாய், கன்று குட்டி இறப்பு ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

Categories

Tech |