Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழை வேண்டி நடத்தப்பட்ட திருவிழா… துள்ளி குதித்த மீன்களை… அள்ளி பிடித்த மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராம மக்களால் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை அள்ளினர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஜெயங்கொண்ட நிலை கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள கருமாத்து கண்மாய் 70 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. 300 ஏக்கர் நிலங்கள் இந்த கண்மாயை நம்பி பாசன வசதி பெறுகிறது. இந்தக் கண்மாய் கடந்த வருடம் தூர்வாரப்பட்டது. கண்மாய் தொடர்ந்து பெய்த கனமழையால் நிரம்பி விவசாயம் செழித்தது. கண்மாய் வற்றியதையடுத்து மழை மீண்டும் தொடர்ந்து பெய்ய வேண்டும் என்று வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

அந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்களும் கலந்து கொண்டனர். துள்ளிக் குதித்து தண்ணீரில் ஓடிய மீன்களை வலைகளை விரித்து மக்கள் பிடித்தனர். தலா ஒரு கிலோ வீதம் ஒவ்வொருவருக்கும் அதிகமான மீன்கள் கிடைத்தன. அவர்கள் அந்த மீன்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று மீன் குழம்பு வைத்து சாப்பிட்டனர்.

Categories

Tech |