இந்திய அணி தோற்ற நிலையிலும் 2 தமிழக வீரர்களின் சிறப்பான விளையாட்டை கண்டு தமிழக மக்கள் பூரிப்படைந்துள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தோல்வி அடைந்தது .
இருப்பினும் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் மிகப் பெரிய ஸ்டார்களாக திகழ்ந்தவர்கள், நமது தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும்தான். இந்திய அணியின் முன்னணி பவுலர்களின் ஓவரில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை குவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஓவரில் பவுண்டரி அடிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர்.
அதிலும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் இன் விக்கெட்டை எடுக்க இந்திய அணியின் முன்னணி வீரர்கள் திணறிக் கொண்டிருந்த சமயத்தில், நடராஜன் தனது சிறப்பான பௌலிங் மூலம் கிளீன் போல்ட் செய்து விக்கெட் எடுத்திருந்தார். அதேபோல் வாஷிங்க்டன் சுந்தரும், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மன்களான Finch மற்றும் Smith ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார். என்ன தான் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் 2 தமிழக வீரர்களின் சிறப்பான விளையாட்டை கண்டு தமிழக மக்கள் பூரிப்படைந்துள்ளனர்.