Categories
சினிமா தமிழ் சினிமா

மஹத்தின் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ … படக்குழு வெளியிட்ட அசத்தலான தகவல்…!!

இயக்குனர் பிரபு ராம் சி இயக்கத்தில் மஹத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ படம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் மஹத். இவர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்ட இவர் இன்னும் அதிகளவு பிரபலமடைந்தார். மேலும் சென்னை 28- 2, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் . தற்போது நடிகர் மஹத் நடிப்பில் இயக்குனர் பிரபு ராம் சி இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ .

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா ,யோகி பாபு, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி கதாநாயகனாக கலக்கி வரும் யோகிபாபு இந்த திரைப்படத்தில் புதையல் தேடும் கடற் கொள்ளையனாக நடிக்கிறாராம். அதிலும் குறிப்பாக படத்தின் ஒரு சீனில் இந்த வித்தியாசமான கதாபாத்திரத்திடம் மற்ற கதாபாத்திரங்கள் மாட்டிக்கொண்டு முழிப்பது காமெடி கலாட்டாவாக அமைக்கப்பட்டிருக்கிறது . இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

 

Categories

Tech |