மகான் படத்தில் மற்றுமொரு பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .
விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் மற்றும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் OTT ரிலீசாக உள்ளது. நடிகர் விக்ரமின் சமீபத்திய படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்காததால் இந்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என விக்ரம் கடுமையாக முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் அப்பா மகன் கதையை கருவாக கொண்டு நகர்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மீண்டும் ஒரு பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார்.