மகராஷ்டிராவில் முதல்வருக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள். மேலும் 9 சுயச்சை எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதிநீக்க நோட்டீசும் முன்னதாக அனுப்பப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை மாலை அதாவது இன்று மாலைக்குள் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.
அந்த பதிலில் திருப்தி இல்லை என்றால் அவர்களை நான் தகுதி நீக்கம் செய்வேன் என்றும் துணை சபாநாயகர் முன்னதாக தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இப்படியான சூழலில் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர். மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.