Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மஹா சமுத்திரம்’ படத்தில் வில்லனாகும் ‘கே.ஜி.எப்’ கருடா ராம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருக்கிறார்.

கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு. இதை தொடர்ந்து இவர் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏகே என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டைட்டன் பரத்வாஜ் இசையமைக்கிறார் . இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |