‘மஹா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
#maha @Siva_Kartikeyan 😇 pic.twitter.com/bxXbQblt50
— Hansika (@ihansika) July 1, 2021
மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வருகிற ஜூலை 2-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் மஹா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.