Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாசி சனிக்கிழமையை முன்னிட்டு…. ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம்…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

மாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் மாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது.

அதன்படி கோவில் அதிகாலை முதலே திறக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் தலைமையில் சாமிக்கு எண்ணெய், மஞ்சள், சீயக்காய், சந்தானம்,பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து 1,008 வடைமாலை ஆஞ்சினேயருக்கு சாத்தப்பட்டது. மேலும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |