Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு… குவிந்த உண்டியல் காணிக்கையை… எண்ணிய பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.27 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.

திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து உண்டியல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் மாசி திருவிழா பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருவிழா நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோவிலில் நடைபெற்றது.

பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 11 பொது உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையை எண்ணினர். அதில் ரூ.27 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் ஒரு கிலோ 770 கிராம் வெள்ளி, 468 கிராம் தங்கம் ஆகியவை பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |