Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாசி மகா பிரதோஷம்…. நடைபெற்ற சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று மாசி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பலம், பன்னீர், திருநீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து சுவாமியை  தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் காலை 7 மணி அளவில் கேட்  திறக்கப்பட்ட பிறகு உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் போன்ற அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் கோவிலுக்குள்   சென்றனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்தனர். மேலும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

Categories

Tech |