நாளை நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நாளை அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இந்நிலையில் மஞ்சிவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் மஞ்சுவிரட்டில் களைகள் வரும் வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.