Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாசு காட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி வீட்டில் சோதனை – ஆவணங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் காட்பாடி காந்தி நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் கோப்புகளை சரிபார்த்து அங்கீகாரம் வழங்க அவர் லஞ்சம் கேட்டு பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு நடைபெற்ற மண்டல அளவிலான கூட்டத்திற்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூட்டம் முடிந்ததும் பன்னீர்செல்வத்தின் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியில் அமைந்துள்ள தனது வீட்டிற்குச் சென்று அவரை அதிரடியாக மடக்கிப்பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது லஞ்சம் பெறுவதற்காகவே அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனது தனிப்பட்ட அலுவலகமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனை முடிவில் கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Categories

Tech |