பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது . மேலும் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ரோஷினி அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரோஷினி மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புடவையில் மட்டுமல்ல மாடர்ன் உடையிலும் கண்ணம்மா அழகு தான் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.