பல்லவி டே மற்றும் பிதிஷா டி மஜும்தார் ஆகிய இரு பிரபல பெங்காலி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களின் மரணத்தைத் தொடர்ந்து, மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் தற்போது நடந்துள்ளது. மாடலும் நடிகையுமான மஞ்சுஷா நியோகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. பல்லவி மற்றும் பிதிஷாவின் அகால மரணத்தின் அதிர்ச்சி முடிவதற்கு முன்பே மஞ்சுஷா நியோகியின் மரணச் செய்தி வருகிறது. மஞ்சுஷா நியோகி காரியாவின் பட்டுலியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இன்று காலை அவரது பெற்றோர் போன் செய்தும், மஞ்சுஷா பதிலளிக்கவில்லை. பின்னர் நடிகை படுக்கையறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மஞ்சுஷாவின் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிதிஷாவும் மஞ்சுஷாவும் தோழிகள். பிதிஷாவின் அகால மரணம் மஞ்சுஷாவை மனரீதியாக பாதிக்கச் செய்ததாக நடிகையின் தாயார் போலீசில் தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகை கொலை செய்யப்பட்டரா, தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.