2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் கார் விபத்தில் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் நவம்பர் 1ஆம் தேதி அன்று கொச்சியில் கார் விபத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ள முக்கிய குற்றவாளியான ராய் வயலாட் என்பவர் நம்பர்-18 ஹோட்டலின் உரிமையாளர் ஆவார்.ஓட்டலில் சிசிடிவி பதிவுகளை அளித்த குற்றத்திற்காக அவருடன் சேர்ந்து 5 ஓட்டல் ஊழியர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காரின் ஓட்டுநர் அப்துல்ரகுமான் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கொச்சியை சேர்ந்த ஓட்டல் அதிபரை இந்த வழக்கில் கைது செய்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் இந்த வழக்கில் எதிர்பாராத பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.