Categories
சினிமா தமிழ் சினிமா

மாடல் அழகிகளுடன் சேர்ந்து போஸ் கொடுக்கும் கமல்…. எதற்காக தெரியுமா?…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சென்ற  2020 ஆம் வருடம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை விற்பனை செய்யும், ஹவுஸ் ஆப் கதர் என்ற கதர் ஆடை நிறுவனத்தை துவங்கி இருப்பதாக கமலஹாசன் அறிவித்தார்.

நெசவுத் தொழிலாளர்களின் வறுமையை போக்கும் வகையில் கதர் ஆடைகளுக்கான இந்த பிராண்டத்தை தான் ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் வியாபாரமாக மட்டுமல்லாது உலகளவில் கைத்தறி ஆடைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த நிறுவனத்தை தொடங்குவதாகவும் கமல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச டிசைனர்களை உள்ளடக்கிய இந்நிறுவனம் பற்றிய ஒரு விளம்பரத்தில் மாடல் அழகியுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்துள்ளார். அவற்றில், கமல் தாடி மீசை கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து காணப்படுகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கதர் ஆடைகளை வயதானவர்தான் அணிய வேண்டும் என அனைவரும் கருதி வரும் நிலையை மாற்றி, இளைஞர்களும் இதனை அணிந்துகொள்ளலாம் எனும் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.

Categories

Tech |