மாடல் அழகியின் மீது அமிலவீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஸ்விட்சர்லாந்தின் நியூச்சடெல் நகரத்தில் 24 வயதான மாடல் அழகியின் மீது அமிலம் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2016ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நடந்த அழகிப்போட்டியில் இறுதி சுற்று வரை பங்கேற்ற பெண் என்று கூறப்படுகிறது. கார் பார்க்கிங்கில் இருந்த இந்த மாடல் அழகியின் மீது மர்ம நபர் ஒருவர் அசிட் ஸ்பிரே அடித்து விட்டு தப்பி சென்றுள்ளார்.
உடனே அங்கிருந்த மற்றொரு நபர் பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி பாதிப்பு ஏற்படாமல் தடுத்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் நடந்த 3 மணி நேரத்திற்கு பின் அப்பகுதியில் வசித்து வந்த 19 வயது இளைஞனை சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .மேலும் அந்த 19 வயது இளைனனுக்கும் மாடல் அழகிக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.