மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் குருசாமி நகரில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வித்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் பால்கனியில் வித்யா நின்று கொண்டிருந்தார்.
அப்போது நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த வித்தியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.