சேலம் மாவட்டத்தில் 50% மானிய விலையில் 450 ரூபாய்க்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு ஆதார் அட்டை நகல்,இரண்டு புகைப்படங்கள் மற்றும் 450 ரூபாய் ஆகியவற்றை அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கொடுத்து மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில் கீழ் அவர் பகுதிகளில் தோட்டம் அமைக்க ஆறு வகையான காய்கறி விதைகள், தல இரண்டு கிலோ தென்னை நாற்கழிவு கட்டிகள் அடங்கிய செடி வளர்ப்பு பைகள் ஆறு எண்கள் வழங்கப்படும்.